எனது வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும். ! அசத்தலான கண்டிஷன் போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

எனது வருங்கால கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும். ! அசத்தலான கண்டிஷன் போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


Ragul preeth singh condition for future husband

தமிழ் சினிமாவில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து அவர் நடிகர் மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தற்போது அவர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் மற்றும் சிவகார்த்திகேயன் ரவிகுமார் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் அயலான் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ragul preeth singh
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங்  தனது திருமணம் குறித்தும் காதல் மற்றும் வருங்கால கணவர் குறித்தும் பேசியுள்ளார்.  அவர் கூறியதாவது, திருமணம், காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவை மிக அழகானவை. ஒருவரைக் காதலிக்கும் போது முழு மனதுடன் காதலியுங்கள். அப்படிப்பட்ட பெண்தான் நான்.

என்னை திருமணம் செய்து கொள்பவர் நன்கு உயரமாக இருக்க வேண்டும். நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். புத்திசாலித்தனம் உடையவராகவும், வாழ்க்கையில் லட்சியம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அவர்  கூறியுள்ளார்.