சினிமா

வாய்ப்பளித்த தல அஜித்! அசத்தலான புகைப்படத்துடன் நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்! செம ஹேப்பியில் ரசிகர்கள்!

Summary:

Ragava lawrence thank ajith for mahaganapathy song chance

இந்தியாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.  மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் எப்பொழுதும் ஆர்ப்பாட்டத்துடன், கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாழ்த்து கூறிவந்தனர்.

மேலும் நடிகர் ராகவா லாரன்ஷும் அமர்க்களம் படத்தில் தான் ஆடிய மகாகணபதி பாடலை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்தப் பாடலின் மூலமாக தான் எனது கேரியர் தொடங்கியது. இந்த தருணத்தில் எனக்கு அந்த வாய்ப்பை அளித்த  இயக்குனர் சரண் மற்றும் நடிகர் அஜித் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களது அனைத்து கனவுகளும் நினைவாக கணபதி ஆசீர்வதிப்பார் என கூறியுள்ளார்.


Advertisement