பிரபல இளம் பாடகர் விபத்தில் சிக்கி மரணம்! நம்பவே முடியலையே...கண்ணீர் விடும் ரசிகர்கள்!

பிரபல இளம் பாடகர் விபத்தில் சிக்கி மரணம்! நம்பவே முடியலையே...கண்ணீர் விடும் ரசிகர்கள்!


Punjabi singer diljaan died in car accident

பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான் சாலை விபத்தில் பலியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகர் 31 வயது நிறைந்த தில்ஜான். அவர் நேற்று  பஞ்சாப் அமிர்தசரஸில் இருந்து கர்தார்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது கார் ஜாந்தியாலா குரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக சென்று சாலையோரம் நின்ற டிரக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. 

இதில் படுகாயம் அடைந்த தில்ஜானை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தில்ஜானை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Punjabi singer

இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வயதில் இப்படியொரு மரணமா? நம்பவே முடியவில்லை, உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும் என பலரும்  வேதனையுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.