சினிமா

பிரபல நடிகரின் மரணத்தை தாங்கமுடியாத ரசிகனின் விபரீத முடிவு.! மூன்றுபேர் மரணம்.!

Summary:

பிரபல நடிகரின் மரணத்தை தாங்கமுடியாத ரசிகனின் விபரீத முடிவு.! மூன்றுபேர் மரணம்.!

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்தனர். இந்தநிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு இந்திய அளவில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். புனித் ராஜ்குமாரின் மறைவு பல்வேறு தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடல்  கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாநில முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அலை அலையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்  கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்த ராகுல் (21) என்ற ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு 2 ரசிகர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement