சினிமா

கன்னட சூப்பர் ஸ்டார் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

Summary:

கன்னட சூப்பர் ஸ்டார் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமாருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement