சினிமா

நான் நிகழ்ச்சியில் மட்டும்தாங்க கோமாளி.. நிஜத்தில் இல்லை! பெரும் வருத்தத்தில் புகழ்! ஏன் தெரியுமா?

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் குவித்து கோமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் குவித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானவர் புகழ். இந்தத் தொடரில் இவர் செய்யும் ரகளைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

மேலும் அவரது உடல் அசைவுகள், முக பாவனைகள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவான நிலையில் அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, நடிகர் அருண் விஜய்யின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த புகழ் தான் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அப்பொழுது அவர்,
ஒருநாள் இயக்குநர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. அவர் என்னை கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு வரச் சொன்னார். 
நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது  என கூறிய அவர் நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்தில் அல்ல என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement