சினிமா

என்னது ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் நின்னு போச்சா! நடிகை ஓபன் டாக்.

Summary:

Priyanka marriage

இன்று மக்கள் அனைவரும் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையில் உள்ள நடிகை, நடிகர்கள், சீரியலுக்கு ரசிகர்களாக மாறி விட்டனர். அந்த வகையில் மக்கள் அனைவராலும் ரசிக்கப்படும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இவர் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை கொண்டவர். ஆனால் அதில் சரியான வாய்ப்புகள் வராததால் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகர் ராகுலை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த தகவலை பிரியங்கா கூறியுள்ளார். அதாவது எங்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் எங்கள் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார். 


Advertisement