"பாலிவுட்டில் தொடர்ந்து அதிர்ச்சி!" பிரியங்கா சோப்ராவின் டீப் பேக் வீடியோ வெளியானது!

"பாலிவுட்டில் தொடர்ந்து அதிர்ச்சி!" பிரியங்கா சோப்ராவின் டீப் பேக் வீடியோ வெளியானது!


priyanka-chopra-deep-fake-video

சமீப காலமாக டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் பிரபல நடிகைகளின் முகத்தை மட்டும் எடுத்து ஆபாச படங்கள் பொருத்தி, சமூக வலைதளங்களில் அந்த வீடியோக்களை பரப்புவது அதிகரித்துள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதால் மோசடி நபர்கள் ஆதாயம் அடைகின்றனர்.

bollywood

முன்னதாக ராஷ்மிகா மந்தனா, கஜோல் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த குறிப்பிட்ட நடிகைகளின் முகத்தை மட்டும் எடுத்து வேறொருவர் நடித்த வீடியோவில் மோசடி செய்த நபர்கள் வைரலாக்கினர்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவும் இந்த டீப் பேக் தொழில்நுட்ப மோசடியில் சிக்கியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் ஆபாச வீடியோவில் சிக்கவில்லை என்றும், அது ஒரு நிதி நிறுவனத்திற்காக விளம்பரம் செய்யும் வீடியோ என்றும் தெரிய வந்துள்ளது.

bollywood

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வரும் இந்த வீடியோ, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் வீடியோ அல்லது ஆடியோக்களை இது போன்ற நிதி நிறுவன விளம்பரங்களை பயன்படுத்தி மோசடி செய்யமுடியும் என்ற அச்சம் எழுந்துள்ளது.