சினிமா

என்னது! தலைவியில் சின்னம்மா சசிகலாவாக இந்த நடிகையா? வெளியான செம ஷாக் தகவல்!

Summary:

priyamani act in sasikala character

தனது சினிமாபயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி,  பின்னர் அரசியலில் பல்வேறு இன்னல்களையும், சவால்களையும்  சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி  ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து  ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் இயக்குனர் விஜய்  தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார்.

thalaivi க்கான பட முடிவு

மேலும்  தலைவி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார், விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சமீபத்தில் வெளியாகியது. அதனை தொடர்ந்து அதற்கு பலர் ஆதரவாகவும், சிலர் ஜெயலலிதாவை போல இல்லை எனவும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் தலைவி படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

priyamani க்கான பட முடிவு

 


Advertisement