புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"பிரபல நடிகருடன் லிப்லாக் செய்ய ஆசையாக உள்ளது" பிரியா பவானி சங்கரின் வைரலாகும் பேட்டி.!?
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர், முதன்முதலில் தனது வாழ்க்கை பயணத்தை சின்னத்திரையில் இருந்து தொடங்கினார்.
இதன்பிறகு வெள்ளி திரையில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், முதன்முதலில் 'மேயாத மான்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக வளர்ந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் பத்து தல, அகிலன், ருத்ரன் போன்ற திரைப்படங்கள் பிரியா பவானி சங்கரின் நடிப்பில் வெளியாகின. படங்கள் பெரிதளவில் வெற்றி பெற்றாலும் இவரின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் தற்போது ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் யூ ட்யூப் சேனலிற்க்கு பேட்டியளித்த ப்ரியா பவானி சங்கர், "படத்திற்கு தேவைப்பட்டால் முத்தக் காட்சியில் நடிப்பேன். எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அல்லு அர்ஜுன் தான். அவருடன் முதன் முதலில் முத்தக் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்று மனம் திறந்து பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பிரியா பவானி சங்கரை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.