சினிமா

எப்போ கல்யாணம்.? ரசிகர் கேட்ட கேள்விக்கு இப்படியா பதில் கூறுவது.? ப்ரியா பவானி ஷங்கர் சொன்ன பதிலை பாருங்க.!

Summary:

Priya bavani shankar funny answer to fan

செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்போது சினிமா நடிகை என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் மேயாதமான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதன்பிறகு SJ சூர்யாவுடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததன் மூலம், பல்வேறு காதல் கிசுகிசுக்களில்  சிக்கினார் ப்ரியா. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். அதில், எப்போது கல்யாணம் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நீயா என்ன படிக்கவச்ச? நீயா எனக்கு வேலை வாங்கி கொடுத்த? நீயா எனக்கு EMI கட்டுற? இல்லைதானே? அப்போ இந்த காப்பிய குடிச்சுட்டு கிளம்பு என காமெடியாக இருக்கும் மீம் ஒன்றை பதிவிட்டு சுவாரசியமாக பதிலளித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.


Advertisement