மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"துருவ் விக்ரம் அயோக்கியத்தனமான செயலைத் தான் செய்வார்" பிரியா ஆனந்தின் பகீர் பேட்டி.!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம். அந்தளவுக்கு நாளுக்கு நாள் புதுப் புது நடிகர், நடிகைகள் வந்தாலும், வாரிசு நடிகர்களும் களமிறங்கி, தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் சீயான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் ஆதித்ய வர்மா என்ற படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து மகான் என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள துருவ், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.
இந்நிலையில், ஆதித்ய வர்மா படத்தில் பிரியா ஆனந்துடன் இணைந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் துருவ் விக்ரம். அப்போது அவரிடம், "சினிமாவில் காதலியுடன் சண்டை போடுவது போல் நிஜத்திலும் போட்டிருக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த துருவ், " நான் இதுவரை யாரையும் காதலித்ததுமில்லை. அதனால் சண்டையுமில்லை" என்று கூறினார். அதற்கு பிரியா ஆனந்த், " இவர் கேவலமான, அயோக்கியத்தனமான சண்டை தான் போடுவார். காதலியுடன் சண்டை போட மாட்டார்" என்று கிண்டலாக கூறியுள்ளார்.