லோகேஷ் கனகராஜின் மனைவி குறித்து பேசிய பத்திரிக்கையாளர்.! கடுப்பான லோகேஷ்.!?Press people question about lokesh wife

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் முதன் முதலில் 'மாநகரம்' திரைப்படத்தின் இயக்குனராக தமிழ் திரை துறையில் அறிமுகமானார். இப்படத்திற்குப் பின்பு திரைத்துறையில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

Lokesh

இப்படம் மிகப்பெரும் அளவு வெற்றியடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு விக்ரம், லியோ போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க போகும் 'தலைவர் 171' திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Lokesh

இது போன்ற நிலையில் ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்த இனிமேல் என்ற பாடல் வெளியானது. இப்பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் லோகேஷ் கனகராஜிடம் உங்கள் மனைவி நீங்கள் இதில் நடிச்சது குறித்து என்ன நினைக்கிறார் என்ற கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லோகேஷ், "என் தனிப்பட்ட வாழ்க்கையை இதில் கொண்டு வரமாட்டேன் என்று சினிமாவில் வருவதற்கு முன்னதாகவே முடிவெடுத்து விட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வியை கேட்காதீர்கள்" என்று கடுப்பாகி பதில் அளித்தார்.