தளபதி 64 படத்தில் மீண்டும் இணையும் மற்றுமொரு முக்கிய பிரபலம்! அவரே வெளியிட்ட உற்சாக தகவல்! யார் தெரியுமா?

தளபதி 64 படத்தில் மீண்டும் இணையும் மற்றுமொரு முக்கிய பிரபலம்! அவரே வெளியிட்ட உற்சாக தகவல்! யார் தெரியுமா?


premkumar join in thalapathi 64 movie

விஜய் இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார்.  இப்படம் தீபாவளியன்று ரிலீசாகி ரசிகர்களிடையே மாபெரும் சாதனை படைத்தது. மேலும் ஸூல் சாதனையும் குவித்தது .

இந்நிலையில் அதனை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்  தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார். மேலும்  இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார். மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

thalapathi 64

அதுமட்டுமின்றி   நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மற்றும் மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு  ஆகியோரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடந்துவருகிறது. 

இந்த நிலையில் தளபதி 64 படத்தில் பிரபல நடிகர் பிரேம்குமார் இரண்டாவது முறையாக இணையவுள்ளார். இவர் ஏற்கனவே சர்க்கார் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த புதிய தகவலை நடிகர் பிரேம் அவரது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.