அடக்கடவுளே.. இவரையும் விட்டு வைக்கலையா! நடிகர் பிரேம்ஜி செய்துள்ள வேலையை பார்த்தீர்களா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

அடக்கடவுளே.. இவரையும் விட்டு வைக்கலையா! நடிகர் பிரேம்ஜி செய்துள்ள வேலையை பார்த்தீர்களா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!


Premji reply ro amirtha ayyer photoshoot post

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் தனது சகோதரரும், இயக்குனருமான வெங்கட்பிரபுவின் பெரும்பாலான படங்களில் ஏதேனும் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விடுவார். 

பிரேம்ஜியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக ரசிகர்களை பெருமளவில் கவரும் வகையில் இருக்கும். பிரேம்ஜி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் நடிகர், நடிகைகள் எந்த புகைப்படங்களை வெளியிட்டாலும், பதிவுகளை வெளியிட்டாலும் உடனே ரிப்ளை செய்துவிடுவார்.

அந்த வகையில் தற்போது பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்து பெருமளவில் பிரபலமான நடிகை அமிர்தா ஐயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட பிரேம்ஜி உடனே அவருக்கு ரிப்ளை செய்து இதயம் துடிப்பது போன்ற GIF-யை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அவரை பலரும் ஜாலியாக கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.