கீழே விழுந்து கை, கால் வரலை, பேச முடியலை!! கண்ணீருடன் சீரியல் நடிகை ப்ரீத்தா வெளியிட்ட ஷாக் வீடியோ!

கீழே விழுந்து கை, கால் வரலை, பேச முடியலை!! கண்ணீருடன் சீரியல் நடிகை ப்ரீத்தா வெளியிட்ட ஷாக் வீடியோ!


preetha-shares-video-about-her-mother-health-condition

90'ஸ் காலகட்டத்தில் ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர்கள் ராகவ்- ப்ரீத்தா ஜோடி. அவர்கள் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானர். மேலும் ராகவ், பிரீத்தா இருவருமே தொலைக்காட்சி தொடர்களிலும், வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்துள்ளனர்.

ப்ரீத்தா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவர் அவ்வப்போது சமையல் மற்றும் ஆன்மீகம் பற்றிய விஷயங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்வார். ஆனால் அவர் தற்போது சோகமான விஷயம் ஒன்றை பகிர்ந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எனது அம்மாவிற்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள். இன்று காலை ஒரு சம்பவம் நடந்தது. எனது அம்மா தவறி கீழே விழுந்துவிட்டார். அதனால் அவரால் பேச முடியவில்லை, கைகால்கள்,செயலிழந்து விட்டது.

இதற்கு முன்பு ஏற்கனவே எனது அம்மாவிற்கு இருமுறை பெரிய சர்ஜரி நடந்துள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது இப்படி நடந்துவிட்டது. மிகவும் மனவேதனையாக உள்ளது. தயவுசெய்து எல்லோரும் எனது அம்மாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என ஆறுதல் கூறி வருகின்றனர்.