சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதால் பிரகாஷ்ராஜிற்கு கொலை மிரட்டல்.! போலீசில் புகார்..

சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதால் பிரகாஷ்ராஜிற்கு கொலை மிரட்டல்.! போலீசில் புகார்..


Prakash raj complaint about youtuber

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

Prakash

பின்னர், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மூலம் 1994ம் ஆண்டு, "டூயட்"  படத்தில் தமிழில் அறிமுகமானார். குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், "டூயட் மூவிஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வரும் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் கர்நாடகாவின் கலபுராகியில் நடைபெற்ற ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சனாதன தர்மம் பற்றி சர்ச்சையான கருத்துக்களைக் கூறியிருந்தார்.

Prakash

இந்நிலையில், பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில், "சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்துக்களுக்காக தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் யூ டியூபில் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரளித்துள்ளார்.