விஜயின் அடுத்த படத்தை இயக்கப் போகும் பிரபுதேவா.? வெளியான செய்தியால் ரசிகர்கள் குழப்பம்.!?Prabhu deva direct vijays next movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

prabhu

இதனை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை, பாங்காக், ரஷ்யா, கேரளா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் விஜயை காண ஆவலாக படையெடுத்து வருகின்றனர்.

மேலும் சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய் அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் மாஸ்கோவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று படைக்குழு சார்பில் கூறியுள்ளனர்.

prabhu

இது போன்ற நிலையில் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளதால் தி கோட் திரைப்படத்திற்கு பின்பு தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பதோடு திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து இப்படத்தை ஹெச். வினோத், வெற்றிமாறன் போன்றவர்களில் யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பின் போது பிரபுதேவா விஜயிடம் படத்திற்கான கதையை கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து தளபதி 69 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.