சினிமா

என்னது.. இவரா! பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகை! யார்னு பார்த்தீங்களா!!

Summary:

என்னது.. இவரா! பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் முன்னணி நடிகை! யார்னு பார்த்தீங்களா!!

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து  சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் கைவசம் தற்போது அடுத்தடுத்ததாக 
ஆதிபுருஷ், சலார் போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக பிரபாஸ் மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. பான் இந்தியா திரைப்படத்தில் நாயகியாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவிற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் சயின்ஸ் திரில்லர் கதையில் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement