#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
உடலை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பூனம் பஜ்வா.. வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் பரத் நடித்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட பூனம் பஜ்வா, குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனிடையே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனையடுத்து தெலுங்கு மொழி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் உடல் எடையை குறைத்து புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.