"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஒவ்வொரு செகண்டும் வேற லெவல்! அசத்தும் எஸ்.ஜே சூர்யா! மிரளவைக்கும் பொம்மை டீசர்!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக, ஹீரோவாக வலம் வந்த எஸ்.ஜே சூர்யா தற்போது வில்லனாகவும் அவதாரமெடுத்து மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் ஹீரோவாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மேலும் பொம்மை படத்தை மொழி, அபியும் நானும் போன்ற படங்களை இயக்கியுள்ள ராஜா மோகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை Think Music வாங்கியுள்ளது.
பொம்மை படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பொம்மை படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் முழுவதும் ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் அசத்தியுள்ளார். இந்நிலையில் பொம்மை ட்ரைலர் இணையத்தில் பெருமளவில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
BOMMAI trailer is here ❤️
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 1, 2022
Link https://t.co/5iLPb84Njq#Bommai #BommaiTrailer@iam_SJSuryah @Radhamohan_Dir @thisisysr
@lamChandini@Richardmnathan @editoranthony
@KKadhirrartdir @kannan_kanal @madhankarky pic.twitter.com/Y3kBoQffL4