அடேங்கப்பா.. பிச்சைக்காரன் பட அம்மா நடிகையா இது! இப்போ என்ன செய்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் மாடர்ன் புகைப்படம்!!

Summary:

அடேங்கப்பா.. பிச்சைக்காரன் பட அம்மா நடிகையா இது! இப்போ என்ன செய்கிறார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தை தயாபரண் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பணக்காரனாக இருந்த விஜய் ஆண்டனி தனது அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக பிச்சைக்காரராக மாறுவார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இவர் அருணாச்சலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில்  குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகை தீபா நடிகை மட்டுமில்ல தொழிலதிபராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் லோட்டஸ்லைன் என்ற பெயரில் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். தற்போதும் கணவருடன் சேர்ந்து குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறாராம். இந்த நிலையில் நடிகை தீபா செம மாடர்னாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அவர் இனி எந்த படத்திலும் நடிப்பதில்லை எனவும், பட வாய்ப்புகள் வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் எனவும் கூறியுள்ளாராம்.


Advertisement