சினிமா

அஜித் படத்திற்கு நேரடி சவால் விடும் சன் பிக்சர்ஸ்! என்ன செஞ்சிருக்காங்கனு நீங்களே பாருங்க!

Summary:

Petta vs visuvaasam pongal release 2019

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் பேட்ட. விஜய் சேதுபதி, சசி குமார், த்ரிஷா, சிம்ரன் என பல சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மாதியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதேபோல இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். விசுவாசம் படத்தில் தல இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தலைக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விசுவசம் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில் விசுவாசம் படத்தை சாடும் வகையில் பேட்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்துள்ளது. அதில்  "கொஞ்சம் ஒதுங்கிறு.. ஓடி பதுங்கிரு.. வர்றது தலைவரு.." என கூறி பதிவிட்டுள்ளனர்.

இது பாடல் வரிகள் தான் என்றாலும், அது அஜித் படத்திற்கு சவால் விடுவது போல உள்ளது என கூறி தல ரசிகர்கள் அது பற்றி கோபமாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.


Advertisement