பேட்ட படத்தின் அறிவிப்பால் அதிரும் தமிழ் சினிமா களம்!

Petta movie releasing date announced


Petta movie releasing date announced

ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரோடு சேர்த்து பேட்ட படம் வெளியாகும் தேதியையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

petta

அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் எந்த படம் எந்த தேதியில் வெளியாகப்போகிறது என்ற பரபரப்பு நிலவி வந்தது. 

இந்நிலையில் பேட்ட படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ட்ரெய்லரோடு சேர்த்து பேட்ட படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்ற இனிப்பான செய்தியையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

petta

அஜித்தின் விசுவாசம் படமும் அதே நாளில் வெளியாக உள்ளதால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் போட்டி நிலவுகிறது. 

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது. மேலும் பேட்ட படம் ஜனவரி 10ல் வெளியாகிறது. அஜித்தின் விசுவாசம் படமும் அதே தேதியில் வெளியாவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.