சினிமா

பேட்ட, விஸ்வாசம் இரண்டுமே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது உண்மையா இல்லையா?

Summary:

Petta and viswaasam released in tamilrockers

வரும் பொங்கலை முன்னிட்டு இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கூடினர்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவின்  படம் வெளியானாலே அனைத்து தியேட்டர்களும் களைகட்டத் துவங்கி விடும். ஆனால் இன்று ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் திரைப்படங்கள் வெளியாவதால் நள்ளிரவு முதலே அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படி ரசிகர்கள் ஒருபுறம் செலவு செய்து கொண்டாடி கொண்டிருக்கும் அதே சமயத்தில் மற்றொரு பிரிவினர் இணையத்தில் எப்போது படம் வெளியாகும் என தேடி வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் தெய்வமாக தெரியும் இணையதளம் தான் தமிழ்ராக்கர்ஸ். 

இன்று வெளியான தமிழ் முன்னனி நட்சத்திரங்கள் இருவரின் படங்களுமே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டதாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஒருசிலர் படத்தினை ஸ்கிரீன் ஸாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் படத்தினை பதிவிறக்கம் செயவதற்கான லிங்கை கேட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழ் ராக்கர்ஸில் இரண்டு படங்களும் உண்மையிலேயே வெளியாகிவிட்டதா இல்லையா எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இது உண்மையா இல்லையா என்பதை நீங்களே கமெண்ட் மூலம் தெரிவித்தால் நன்றாக இருக்கும். 


Advertisement