சினிமா

வசூலை வாரி குவித்த பேட்ட மற்றும் விசுவாசம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Summary:

Petta and visuvasam movie first day collection report

பொங்கலை முன்னிட்டு ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விசுவாசம் திரைப்படமும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் முதல் பாகம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாகம் சற்று தாங்களாகவே உள்ளது.

அதேபோல இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் முதல் பாகம் சொதப்பலாக இருந்தாலும், இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. ரஜினி, அஜித் ரசிகர்களை தாண்டி, நடுநிலையான ரசிகர்களை கேட்கும்போது, இரண்டு படங்களும் சுமாராக இருப்பதாகத்தான் கூறுகிறார்கள்.

இந்நிலையில் பேட்ட மற்றும் விசுவாசம் படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 48 கோடியும், தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் விசுவாசம் திரைப்படம் உலகம் முழுவதும் 43 கோடியும், தமிழகத்தில் மட்டும் 26 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்துள் வெளியாகியுள்ளது. 


Advertisement