"அந்த வார்த்தைய மட்டும் சொல்லாதீங்க..." 90's ஃபேவரைட் பெப்ஸி உமாவின் அழகு பற்றி கருத்து பேட்டி!

"அந்த வார்த்தைய மட்டும் சொல்லாதீங்க..." 90's ஃபேவரைட் பெப்ஸி உமாவின் அழகு பற்றி கருத்து பேட்டி!


pepsi-uma-explains-what-is-real-beauty-wkgjck

உமா மகேஸ்வரி  இவரை தெரியாத 90ஸ் கிட்ஸ்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பரிச்சயமானவர் இவர். இவரை பெப்சி உமா என்று அழைத்தால் தான்  பெரும்பாலானோருக்கு தெரியும்.

90களில் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம்  சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப் பிரபலமானவர் பெப்சி உமா. சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்திலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

pepsiuma

சினிமா கதாநாயகருக்கு இணையாக இவரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது திருமணம் முடிந்து குடும்பமாக செட்டில் ஆகி விட்டாலும் என்ன திரை ரசிகர்களுக்கு இவர் என்றுமே கதாநாயகியாக தான் இருந்து கொண்டிருக்கிறார். குமுதம் இதழுக்கு அழகினைப் பற்றி பேசி இவர் கொடுத்திருந்த அந்தப் பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

pepsiuma

அழகு பற்றிய உங்களின் கருத்து என்று நிருபர் கேட்ட கேள்விக்கு "இதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள் எனக்கு பயமாக இருக்கிறது எனக் கூறியவர். பெண்களை முகம் மற்றும் உடல் தோற்றத்தை வைத்து அழகு என்று வர்ணிப்பதை  தான் ஒரு போதும் விரும்புவதில்லை என தெரிவித்திருக்கிறார். ஆண் பெண் இருவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான விஷயம் என்று கூறிய அவர் அழகை மட்டுமே வைத்து பெண்களை எடை போடுவது முட்டாள்தனம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அழகு என்பது பார்த்தவுடன் மனதை சந்தோஷப்படுத்தும் எல்லா விஷயமே அழகுதான் எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.