அந்த ஹிட் படத்தில் நடித்த நடிகரா இவர்.! வெளியான புகைப்படத்தால்ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!?Pasanga movie actor latest photos viral at social media

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பாண்டியராஜன். பசங்க திரைப்படம் இவர் இயக்கத்தில் தமிழ் மொழியில் 2009ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் கிஷோர் டி எஸ் மற்றும் ஸ்ரீராம் பாண்டியன். இப்படத்தில் புது முகமாக விமல் நடித்துள்ளார் மற்றும் சப்போர்ட்டிங் ரோலில் வேகா டொமோட்டியா என்ற ஹீரோயின் நடித்துள்ளார்.

Pasanga

இப்படம் சசிகுமார் தயாரிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவானது. பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் தனது முதல் படத்திலேயே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தமிழ் திரை துறையில் இயக்குனராக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.

2009 ஆம் வருடம் வெளியான இப்படம் 3 நேஷனல் ஃபிலிம் அவார்ட்களையும், இன்டர்நேஷனல் ஃபிலிம் அவார்டுகளையும் பெற்றுள்ளது. பசங்க படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த பாண்டியராஜ் தனது முதல் படத்தில் ரசிகர்களின் கவனத்தை தன்  பக்கம் ஈர்த்தார். 4 சிறுவர்களின் வாழ்வியல், யதார்த்தமான ஸ்கூலுக்கு செல்லும் பருவத்தை அழகான கதையின் மூலம் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்து இருப்பார்.

Pasanga

இந்த படத்தின் மூலம் நடிகர் விமலும் திரை உலகில் செம்ம ஆக்டிவாக ஆனார். இப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம் பாண்டி, பக்கோடா, தாரணி போன்ற குழந்தை நட்சத்திரங்கள் தனது அட்டகாசமான நடிப்பால் திரை உலகில் பெரும் பாராட்டை பெற்றனர். இது போன்ற நிலையில், பசங்க திரைப்படத்தில் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.