கமலை குறித்து நடிகர் பார்த்திபன் போட்ட நறுக் பதிவு! குவியும் ரசிகர்களின் ஆதரவு!!

கமலை குறித்து நடிகர் பார்த்திபன் போட்ட நறுக் பதிவு! குவியும் ரசிகர்களின் ஆதரவு!!



parthiban-tweet-about-kamal

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் திமுக 158 தொகுதிகளில் முன்னிலையில் வந்து 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திமுக. தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் நேற்று வாக்கு எண்ணிக்கையில் கோயம்புத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் இருந்து வந்தார். அவர்தான் வெற்றி பெற்றுவிடுவார் என ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் வெற்றியடைந்தார்.

இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாகவும், கோவை மக்களை திட்டியும் நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் கமலுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில், திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல், வெல்வதற்கு கூட்டு, பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.