"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
செம ஹேப்பியில் நடிகர் பார்த்திபன்! கேக் வெட்டி கொண்டாடிய மகன், மகள்! என்ன ஸ்பெஷல் தெரியுமா??
செம ஹேப்பியில் நடிகர் பார்த்திபன்! கேக் வெட்டி கொண்டாடிய மகன், மகள்! என்ன ஸ்பெஷல் தெரியுமா??

67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக 2019-ம் ஆண்டு வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கும் சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் தயாரிப்பில், இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இத்திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும், பாராட்டும் பெற்றது.
இந்நிலையில் தற்போது ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்திற்கு சிறப்பாக ஒலிப்பதிவு செய்ததற்காக ரசூல் பூக்குட்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் பார்த்திபன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் மற்றும் மகன் இருவரும் பார்த்திபனின் அடுத்த படமான இரவில் நிழல் படப்பிடிப்பிற்கே சென்று இந்த சந்தோசத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.