கோபத்தில் மைக்கை தூக்கி வீசியது இதனால்தான்! உண்மையை கூறி மனம் வருந்திய பார்த்திபன்!!

கோபத்தில் மைக்கை தூக்கி வீசியது இதனால்தான்! உண்மையை கூறி மனம் வருந்திய பார்த்திபன்!!



parthiban-abologies-to-throw-the-mic-in-stage

தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்குவதில் வல்லவராக திகழ்பவர் பார்த்திபன். இயக்குனராகவும், பிரபல நடிகராகவும் வலம் வரும் அவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் எந்த எடிட்டிங்கும் இல்லாமல், ஒரே ஷாட்டில் 96 நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் ஏ.ஆர் ரகுமான், சமுத்திரக்கனி, 
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பார்த்திபன் பேசிக்கொண்டிருந்தபோது முதல் சிங்கிள் வெளியிடுவது பற்றிய அறிவிப்பை  வெளியிட ரோபோ சங்கர் மைக் கேட்டாராம். 

அப்பொழுது மேடையில் ஏஆர்.ரஹ்மானுடன் அமர்ந்திருந்த பார்த்திபன் மைக்கை ரோபோ சங்கரை நோக்கி வீசி அதை முன்னாடியேல்ல கேட்கணும் என்று கோபமாக பேசியுள்ளார். பார்த்திபனின் இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிடைய வைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து பார்த்திபன் கூறுகையில், நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு அநாகரிகமாக நடந்து கொண்டேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரஹ்மானுக்கு 8 கிலோ வெள்ளி ஷீல்டு கொடுக்கும்போது அந்த வெயிட் அவர்மேல் சேர்ந்து விடக் கூடாது என்ற பதற்றம், 2 நாட்கள் தூக்கமில்லாமல் வேலை பார்த்தேன். அந்த டென்ஷன் எல்லாம் சேர்ந்து இப்படி செய்துவிட்டேன். இனி சரி செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.