அடஅட.. பாபநாசம் படத்தில் நடிச்சவரா இது! நல்லா வளந்து அடையாளமே தெரியாம வேற லெவலில் இருக்காரே!!

அடஅட.. பாபநாசம் படத்தில் நடிச்சவரா இது! நல்லா வளந்து அடையாளமே தெரியாம வேற லெவலில் இருக்காரே!!



papanasam esther latest photo viral

மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன் லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இப்படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும் அவர்களுக்கு மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்தது.

papanasam

இந்நிலையில் பாபநாசம் படத்தில் கமலின் சின்ன பெண்ணாக நடித்த எஸ்டர் தற்போது நன்கு வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்தவரா இது! என ஆச்சரியமடைந்துள்ளனர்.

papanasampapanasam