சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவா இது? 12 வருடத்திற்கு முன் நடித்த முதல் சீரியலில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்!

Summary:

Pandiyan stores jeeva 12 years old photo goes viral

12 வருடத்திற்கு முன் தான் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தபோது எப்படி இருந்தேன் என்ற புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது.

இந்த தொடரில் ஜீவா என்ற காதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் வெங்கட். ரங்கநாதன். முதலில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த சீரியலை தொடர்ந்து ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் வெங்கட். ஆனால் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில்தான். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் 12 வருடத்திற்கு முன் தான் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தபோது எப்படி இருந்தேன் பாருங்கள் என்று  தனது பழைய புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வெங்கட். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

https://cdn.tamilspark.com/media/333043vh-1-4-576x1024.jpg


Advertisement