வாத்தி கம்மிங்.. அச்சு அசல் அப்படியே விஜய் போல செம குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! வைரலாகும் வீடியோ!!pandian-stores-jeeva-dance-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் போன்றவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் ரசிகர்களால் கவரப்பட்டார். இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்துள்ளார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அப்போது நடனமாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அச்சு அசல் அப்படியே விஜய் போலவே நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது