முத்தம் கொடுத்தாதான் நடிக்க விடுவோம்.. 8 பேர்.., ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நபர்..!pandian-stores-aishwarya-about-cine-carrier

எட்டு பெண்கள் வந்து முத்தமிட்டு சென்றார்கள், உங்களால் முடியாதா? என கேள்வி கேட்டதாக நடிகை கூறினார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அண்ணன் தம்பிகளின் பாசக்கதையையும், கூட்டுக் குடும்பத்தின் ஒருங்கிணைப்பையும் உணர்த்தும் பொருட்டு தமிழக மக்களிடையே பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். 

இந்த தொடரில் சுஜிதா, வெங்கட், ஹேமா, ராம்குமார், லாவண்யா, குமரன், சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நெடுந்தொடருக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 

pandian stores

தமிழில் மட்டும் தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணன், தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையாக காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே சென்றுவிட்டனர். 

இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே தீபிகா முதலில் வெளியேற்றிய நிலையில் பின்னர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துடன் இணைந்துள்ளார். 

pandian stores

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "நான் நடிக்க வந்தகாலத்தில் ராகவா லாரன்ஸ் படத்திற்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆடிசனுக்கு நான் சென்று இருந்தேன். அங்கு எனக்கு படத்தில் கதாபாத்திரம் முத்தம் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. அதை செய்து காட்ட வேண்டும் என்று அங்கு இருந்தவர் கூறினார். 

நான் அப்படி உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். வேறு கதாபாத்திரம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு பின்பு எட்டு பெண்கள் வந்து முத்தமிட்டு சென்று இருக்கிறார்கள். உங்களால் கொடுக்க முடியாதா? என கூறினார்" என என்று தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன அந்த நபர் இயக்குநரா? அல்லது திரைத்துறையை சேர்ந்தவரா? என நடிகை குறிப்பிடவில்லை.