"கஷ்டத்தில் இருந்தபோது செய்த உதவியை மறந்துட்டாரு" - பிரபல இயக்குனர் குறித்து மனமுடைந்த கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்..!!

"கஷ்டத்தில் இருந்தபோது செய்த உதவியை மறந்துட்டாரு" - பிரபல இயக்குனர் குறித்து மனமுடைந்த கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்..!!


Pandian stores actor speech about famous director

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ரவிச்சந்திரன். இவரை மீனாவின் தந்தை ஜனார்த்தனன் என்றும் அறிமுகம் செய்யலாம். பல சின்னத்திரை சீரியலிலும், படத்திலும் நடித்த நடிகர் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சொந்த ஊராகக் கொண்டவர். 

அவர் தொடக்கத்தில் மசாலா கம்பெனியை நடத்தி அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஊரை விட்டு சென்னை வந்து பின்னர், நடிகர் நண்பர்கள் மூலமாக விளம்பரபடத்தில் நடித்தவர் ஆவார். அதனை தொடர்ந்து சின்னத்திரையிலும், பெரியதிரையிலும் நடித்து வருகிறார். 

Director muthaiya

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இயக்குனர் முத்தையாவிற்கு நான் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தேன். அந்த உதவியின் மதிப்பு குறைவாக இருந்தாலும் அது அந்த சமயத்தில் பெரிதாக இருந்தது. அவரே என்னிடம் இதை பலமுறை கூறியிருக்கிறார்.

அதற்கு பிறகு அவர் இயக்குனரான நிலையில், குட்டிப் புலி படத்தின் போது வாய்ப்பு கேட்டேன். அவர் கொடுக்கவில்லை. அவர் எடுத்த நான்கு படத்திலும் வாய்ப்பு கேட்டேன். அவர் வாங்கித் தராததால் மனமுடைந்து அவரிடம் செல்வதை நிறுத்திக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.