வெளிச்சத்திற்கு வந்த கோபியின் உண்மைமுகம்! ராதிகாவிற்கு வாக்கு கொடுத்த பாக்யா! சூடுபறக்கும் வீடியோ!!

வெளிச்சத்திற்கு வந்த கோபியின் உண்மைமுகம்! ராதிகாவிற்கு வாக்கு கொடுத்த பாக்யா! சூடுபறக்கும் வீடியோ!!


pakialakshmi-promo-video-viral

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டது. இந்த தொடரில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த எபிசோடுகளில் ராதிகாவிற்கு கோபி குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. மேலும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து கோபி தூக்கத்தில் தனக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளது என்ற உண்மையை உளறுகிறார். இதனைக் கேட்டு பாக்கியலட்சுமி ஷாக்காகிறார்.

இந்த நிலையில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வீட்டிற்கு வரும் பாக்கியாவிடம் ராதிகா, அவர் குடும்பத்தைப் பற்றி சொன்னதெல்லாம் பொய். அவரே என்னிடம் கூறினார் என்று கூறியுள்ளார்.

அதற்கு பாக்கியா, அவரே அவரை பத்தி சொல்லி இருக்கார் என்றால் அவர் நல்லவரா இருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல. நீங்க விரும்பியவரை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருப்பீங்க. கவலைப்படாதீங்க என கூறியுள்ளார். இந்த சூடுபறக்கும் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.