சினிமா

கலைக்கப்படுகிறதா ஓவியா ஆர்மி? செம கடுப்பில் ஓவியா ரசிகர்கள்!

Summary:

Oviya and arav celebrated new year

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார் நடிகை ஓவியா. களவாணி படத்திற்கு பிறகு இவர் நடித்த கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஒருசில படங்களுக்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை ஓவியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புகள், கலாட்டாக்கள், நடனம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் தன்னுடைய சாகப்போட்டியாளரான ஆராவை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. இந்நிலையில் நடிகை ஓவியாவிற்காகா அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மி என வலைதள பக்கங்களை தயார்செய்து அதில் ஓவியா புகழ் பாடினார்.

இந்நிலையில் ஓவியா, ஆரவ் இருவரும் ஒன்றாக இணைந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் "இப்போது இந்த வருடம் அமைதியாக முடியும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.மேலும் #Araviya என இரண்டு பேரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது என ஓவியா ஆர்மியினர் கூறி வருகின்றனர். மேலும் ஓவியா ஆர்மி ஆரம்பித்ததன் காரணம் வீணாய்ப்போய்விட்டது என்று புலம்பி வருகின்றனர் ஓவியா ஆர்மியினர்.


Advertisement