சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய இரண்டாவது போட்டியாளர்! இதுதான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர் நோயல் சீன் உடல்நலக்குறைவால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தெலுங்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஆரம்பமானது. மேலும் அதன் நான்காவது சீசன் 16 போட்டியாளர்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது.  இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆகும்நிலையில், நாமினேட் செய்யப்பட்டு 8 பேர் வெளியேறிவிட்டனர்.  மேலும் உடல்நலக்குறைவால் ஒருவர் வெளியேறிவிட்டார்.

அவர்களை தொடர்ந்து நேற்று மற்றொரு போட்டியாளரான நோயல் சீன் என்பவர் போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறியுள்ளார். அதாவது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பரிசோதனை செய்ததில் அவரை மேற்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய 47நாட்கள் இருக்கையில், தற்போது வெறும் 6 போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.


Advertisement