சினிமாவில் இருந்து விஜய் விலகல்.. அடுத்த தளபதி யார்? சண்டையை தொடங்கிய ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விஜய் விலகல்.. அடுத்த தளபதி யார்? சண்டையை தொடங்கிய ரசிகர்கள்!



Next thalapathi tamil cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

vijay

மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த தளபதி யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி விஜய் எப்படி ரஜினி வழியை பின்பற்றி வந்தாரோ அதேபோல், நடிகர் விஜய் வழியை சிவகார்த்திகேயன் பின்பற்றி வருகிறார். மேலும், மசாலா படங்கள் மற்றும் குடும்ப திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

vijay

எனவே அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மற்றொரு பக்கம் தனது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் உயர்ந்தவர் தனுஷ். எனவே தனுஷ் தான் அடுத்த தளபதி என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.