ஆரம்பமே அமர்க்களம்.. புத்தாண்டில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! New year surprise for Ajith fans

 

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித்குமார், திரிஷா, ரெஜினா உட்பட பலரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். 

cinema news

இப்படம் வரும் 2024-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cinema news

அஜித் படங்களை பொறுத்த அளவு எப்போதும் அப்டேட்டுக்காக நீண்ட காத்திருப்பு என்பது இருக்கும். அது தற்போது விடாமுயற்சி படத்திற்கும் தொடரும் நிலையில், புத்தாண்டு அன்று சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.