சினிமா

இந்த புத்தாண்டிற்கு சன் டீவியில் என்ன திரைப்படம் தெரியுமா? இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக!

Summary:

New year special movie in sun tv

தொழில்நுட்ப்பம், இன்டர்நெட், ஸ்மார்ட் போன் இவை வருவதற்கு முன்பு படம் பார்ப்பது என்பது குறிப்பிட்ட மக்களுக்கு சவாலாகவே இருந்தது. திரை அரங்கில் வெளியாகி, அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வரை காத்திருந்து அந்த படத்தை பார்த்து வந்தனர்.

ஆனால் இப்போது, படம் திரையில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி அனைவரும் அதை பார்த்து விடுகின்றனர். முன்பெல்லாம் ஏதவது பண்டிகை நாட்கள் வந்தால் தொலைக்காட்சியில் என்ன படம் போடுவார்கள் என்று ஒரு வாரத்திற்கு முன்பே மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் இப்போது புதிதாகா வெளியான படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட யாரும் கண்டுகொள்வது இல்லை.

பண்டிகை காலங்களில் படம் பார்ப்பதற்கு மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சிதான். இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற வசனம் மக்கள் மத்தியில் ஒரு குதுகலத்தை ஏற்படுத்தும். ஆனால் இன்று அந்த வார்த்தையின் மீது இருந்த மோகம் குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

சரி விஷயத்துக்கு வருவோம். வரும் புத்தாண்டிற்கு சன் தொலைக்காட்சியில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் சீமராஜா ஒளிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சியுடன் கண்டுகளியுங்கள்.

பழைய நினைவுகளை பதிவிட நினைப்போர் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.


Advertisement