சினிமா

ரசிகர்களின் வாழ்த்து மழையில் தேவி-2 ; ஹிட்டான பாடல்களால் படக்குழுவினர் உற்சாகம்.!

Summary:

new tamil movie devi2- prabhudeva- thamana - succesful running

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க்கத்தில் உருவான படம் தான் தேவி. இந்த படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டரான நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை தமன்னா நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. 

 இதனை அடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி 2 என பெயரிடபட்டுள்ளது. இந்த தேவி 2 விலும் நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார். மீண்டும் ஏ.எல்.விஜய்யே இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.  

நேற்றுமுன்தினம் 31ஆம் தேதி என்ஜிகே படத்துடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக 'சொக்குற பெண்ணே' என்ற பாடல் ஹிட் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். 


Advertisement