சினிமா

இளைஞர்களை குஷிப்படுத்தவரும் சன் டிவியின் புத்தம் புதிய சீரியல்கள்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

நவம்பர் 2-ம் தேதி முதல் சன் டிவியில் இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆரம்பத்திலிருந்து சீரியலுக்கு பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். ஆனால் தற்போது பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இதனால் சீரியல்களால் பல தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆனாலும் இன்றுவரை trp ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பது சன் டிவி தான். அதற்க்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட மற்றும் புதுப்புது சீரியல்கள் சீரியல்கள் தான். இந்தநிலையில் ஏற்கனவே தமிழில் நந்தினி, சாக்லேட் சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் குறிப்பாக இளம் பெண்களின் மனதில் சாக்லேட் பாயாக இடம் பிடித்த ராகுல் ரவி நடிக்கும் "கண்ணான கண்ணே" எனும் புதிய சீரியல் நவம்பர் 2-ம் தேதி முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


அதேபோல் குரங்கு பொம்மை பட ஹீரோயின் டெல்னா டேவிஸ் நடிகையாகவும், விராட் நாயகனாகவும் நடிக்கும் "அன்பே வா"  எனும் புதிய சீரியல் நவம்பர் 2-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. சன் டிவியில் புதிதாக வரவிருக்கும் சீரியலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement