அட.. இவர்தான் புது கண்ணம்மாவா! அசத்தலாக என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை! வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!

அட.. இவர்தான் புது கண்ணம்மாவா! அசத்தலாக என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை! வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!


new kannamma entry on bharathi kannamam serial

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வரும் திடீர் திருப்பங்கள் மக்களுக்கு தொடரின் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

இந்த தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடித்து வருகிறார். ஹீரோயினாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். மாடல் அழகியான ரோஷினி தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். 

இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து கண்ணம்மாவான ரோஷினி விலகியுள்ளார்.அதனை தொடர்ந்து புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்கவுள்ளார். மாடலிங் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த வினுஷா தமிழில் வெளியாகவுள்ள என்4 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வரவுள்ள  எபிசோடுகள் குறித்த ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.