திடீரென காணாமல் போக இதுதான் காரணமா? உண்மையை போட்டுடைத்த நடிகை நஸ்ரியா.! ரசிகர்கள் அதிர்ச்சி!!



nazriya-post-about-why-not-active-in-social-media

தமிழில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் நேரம், நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நஸ்ரியா மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காணாமல் போன நஸ்ரியா

நஸ்ரியா பிரபல மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இறுதியாக அவர் "சூக்ஷம தர்ஷினி" என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் நஸ்ரியா பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில் அதுகுறித்து தற்போது அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நஸ்ரியா நீண்ட அறிக்கை

அதில் அவர், அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். பலருக்குத் தெரியும், நான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பேன் என. ஆனால் கடந்த சில மாதங்களாக எனது உடல்நிலை சிக்கல் மற்றும் தனிப்பட்ட சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் யாருடனும் பேசமுடியாத நிலையில் உள்ளேன்.

மன்னித்து விடுங்கள்

எனது 30வது பிறந்தநாளையும், புத்தாண்டு,  சூக்ஷமதர்ஷினி பட வெற்றி உள்ளிட்ட பல முக்கிய தருணங்களை கொண்டாடுவதை நான் தவறவிட்டுவிட்டேன். எனக்கு அழைப்பு விடுத்தவர்கள், எனது பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்திற்கு வருந்துகிறேன்.நான் என் சக ஊழியர்களிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். அவர்களது அழைப்பை நான் ஏற்காமல் இருந்ததால் அவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கலாம்.

இதையும் படிங்க: எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் இருக்காங்க.! அதற்காக இதெல்லாம் நடக்குமா?? போட்டுடைத்த நடிகை பூஜா ஹெக்டே!!

மீண்டு வருவேன்

இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. கேரள திரைப்பட விமர்சகர் விருது, அதாவது சிறந்த நடிகைக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தாலும் நான் மீண்டு வர கடுமையாக முயற்சி செய்கிறேன். நான் முழுமையாக மீண்டு வர எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம். உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. விரைவில் உங்களை அனைவரையும் சந்திப்பேன் என கூறியுள்ளார். 
.
 

இதையும் படிங்க: என் பொண்டாட்டியை விட அஜித்திடம்தான்.. எமோஷனலான குட் பேட் அக்லி இயக்குனர்.! அட.. அம்புட்டு லவ்!!