என் பொண்டாட்டியை விட அஜித்திடம்தான்.. எமோஷனலான குட் பேட் அக்லி இயக்குனர்.! அட.. அம்புட்டு லவ்!!



director-aadik-ravichandran-emotional-about-ajith

தமிழ் சினிமாவில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தை தொடர்ந்து அவர் அஜித்துடன் கூட்டணியில் இணைந்து உருவான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் 170கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

எமோஷனலான இயக்குனர்

 

இந்நிலையில் சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நான் அஜித் சார் ரசிகனாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. எதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால் என்ன நடக்கும் என இந்த தருணத்தில் எனக்கு புரிந்துள்ளது.

இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!

Aadik Ravichandran

அஜித் சார் தான் காரணம்

 

நான் எப்பொழுதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.அஜித் சாரைப் பொறுத்தவரை எப்போதுமே யாரிடமும் வெற்றி தோல்வியை பார்ப்பதில்லை.  ஒரு சக மனிதராக மட்டும்தான் பார்ப்பார். இந்த படம் இவ்வளவு எனர்ஜியாக இருக்க அஜித் சார்தான் காரணம். முதல் நாள் ஷுட்டிங்கிலிருந்து கடைசி நாள் டப்பிங் வரை அவர் முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். படத்தின் தலைப்பே அவர் கூறியது தான். 

அதிகமுறை லவ் யூ

 

 அவருக்கு என்து அன்பை தெரிவித்து கொள்கிறேன். லவ் யூ சார். என்து மனைவியை விட உங்களிடம் தான் நான் அதிக ஐ லவ் யூ சொல்லியிருக்கிறேன். என் பெற்றோர், குடும்பத்திற்கு அடுத்து நீங்கள் தான் முதலில் வருவீர்கள் என எமோஷனலாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??