சினிமா

நடிகை நஸ்ரியாவின் கணவருக்கு என்னாச்சு! ஏன் இவ்வளவு மோசமாகிவிட்டார்! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

nazriya husban fahad next movie photo viral

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ரொம்ப வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நஸ்ரியா நையாண்டி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா நடிகர் பகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் பகத் தற்போது மாலிக் என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

உண்மைக் கதையை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் 20 வயதில் இருந்து 57 வயது வரை உள்ள தோற்றத்தில் பகத் நடிக்கிறார். மேலும் அதற்காக அவர் 10 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாகி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement