வாவ்.. நடிகை நயன்தாரா சிறுவயதில் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா.! கொஞ்சி தள்ளும் நெட்டிசன்கள்!!

வாவ்.. நடிகை நயன்தாரா சிறுவயதில் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா.! கொஞ்சி தள்ளும் நெட்டிசன்கள்!!


nayanthara-wishing-post-on-her-father-birthday

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான  திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பின் இருவரும் 6ஆண்டு காதலுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆனர். மேலும் பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை நயன்தாரா பான் இந்தியா நடிகையாகவும் வலம் வருகிறார். மேலும் அவர் பிசினஸிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது படம், பிசினஸ் மற்றும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.

nayanthara

இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேரளாவுக்கு சென்று உறவினர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார். மேலும் சிறுவயதில் தான் தன் தந்தையிடம் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 
ஹாப்பி பர்த்டே. எனது ஹீரோ, எப்போதும் என்னுடைய லவ். ஐ லவ் யூ அச்சா என பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் நடிகை நயன்தாரா சிறு வயதில் செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.