செம சிம்பிளாக, திருமணம் முடிந்த கையோடு நயன்-விக்கி ஜோடி எங்கு சென்றுள்ளனர் பார்த்தீர்களா.! வைரல் புகைப்படங்கள்!!nayanthara-vignesh-shivan-went-to-tirupathi-after-marri

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் திருமண புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.

nayanthara

மஞ்சள் நிறப் புடவையில் மிகவும் எளிமையாக நயன்தாரா கோவிலில் தரிசனம் செய்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முதலில் திருப்பதியில்தான் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 200க்கும் மேற்பட்டோர் திருமணத்தில் கலந்துகொள்ள இருந்ததால் திருப்பதி தேவஸ்தானத்தில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

nayanthara